மெய்யறிவுக் கொண்டாட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أبريل 03، 2023

Comments:0

மெய்யறிவுக் கொண்டாட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு

மெய்யறிவுக் கொண்டாட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு Awareness Celebration - Commissioner of School Education Press Call

செய்தியாளர் அழைப்பு

மெய்யறிவுக் கொண்டாட்டம்

மாநில அளவிலான வினாடிவினா பயிலரங்கம். இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், நாள் : ஏப்ரல் 3 காலை 11 மணி

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு அரசின் மற்றுமொரு முக்கியமான முன்னெடுப்பு வினாடிவினா போட்டிகள்.

6 முதல் 9 வகுப்புகள் வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பள்ளிக் கல்வித் துறை 'தேன்சிட்டு' என்கிற சிறார் இதழை நடத்தி வருகிறது. அந்த இதழை வாசித்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் வாசிப்புக்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதழில் வெளியான படைப்புகள் சார்ந்த கேள்விகள் தயாரிக்கப்பட்டு வினாடிவினா போட்டிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வென்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு. அதில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டப் போட்டிகளில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவிலான மெய்யறிவுக் கொண்டாட்டம்' பயிலரங்கத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைத்துக் கொடுக்கும் தளம் இது. துறைசார் வல்லுநர்களும் பல்வேறு ஆளுமைகளும் மாணவர்களுடன் உரையாட இருக்கின்றனர்.

ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் பயிலரங்கின் தொடக்க விழா 03.04.2023 திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா இ.ஆ.ப உட்பட பங்கேற்கிறார்கள். துறை அலுவலர்கள் இந்நிகழ்விற்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆணையர் பள்ளிக் கல்வி

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة