ஏப்.18, 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை - April 18th and 19th are local holidays
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.18-ம் தேதியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.19-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஏப்.18, 19 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். அதேவேளையில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் பொருந்தாது.
இந்த விடுமுறை நாட்களில், மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் ஏப்.29, மே 13 வேலை நாட்களாக இருக்கும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.