வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறைவேற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 21, 2023

Comments:0

வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறைவேற்றம்!

வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறைவேற்றம்!

தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்படுகிறது.

எனவே இந்த 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என திமுக கட்சியினர் கட்சியினர் இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும், இந்த சட்டம் மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், தொழிலாளர்களின் உரிமை பாதிக்கும் என கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், 12 மணி நேர வேலை தொடர்பான 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த விளக்கத்தில் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை, விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் எனவும் பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் மேலும் விளக்கமளித்தார்.

தமிழக அரசுஅமைச்சர் சி.வெ.கணேசன் | கோப்புப்படம்சென்னை: "எந்தவொரு தொழிற்சாலையாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக் கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பம் இல்லையென்றால், நிச்சயமாக அரசு பரிசீலனை செய்து, ஆய்வு செய்துதான் நடைமுறைப்படுத்தப்படும்" என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews