Breaking

Saturday, April 15, 2023

"பள்ளியில் சேரும் மாணவருக்கு 1 கிராம் தங்கம்" - அரசு பள்ளி அசத்தல் அறிவிப்பு

"பள்ளியில் சேரும் மாணவருக்கு 1 கிராம் தங்கம்" - அரசு பள்ளி அசத்தல் அறிவிப்பு - "1 gram of gold per student enrolled in school" - Govt school wacky announcement

நன்னிலம் அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களில் ஒருவருக்கு, தங்க நாணயம் வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா.

இவர் வரும் கல்வியாண்டில் தனது பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும், பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அந்த மாணவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த முன்னெடுப்பை இந்திரா கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog