அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விப் பிரிவு - தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مارس 19، 2023

Comments:0

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விப் பிரிவு - தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு



அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விப் பிரிவு

தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு

அரக்கோணம், மார்ச் 16: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 - 2014 வரையிலான கல்வியாண் டுகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே, டிசம்பர் 2023 ஆகிய இரண்டு பருவங்களில் சிறப்பு தேர்வுகள் நடை பெற உள்ளன என அரக்கோணம் அலுவலக பொறுப்பு அலுவலர் தினேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 முதல் 2014 கல்வியாண்டுகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக 2023 மே மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு பரு வங்களில் சிறப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இதற்கான விவரங்களுக்கு அண்ணா மலை பல்கலைக்கழக படிப்பு மைய பொறுப்பு அலுவலர் தினேஷை 81228 10012 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மே 2023-க்கான சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மார்ச் 3 முதல் மார்ச் 31-க்குள் பல்கலைக்கழக இணையதள இணைப் பில் தங்களது விவரங்களை பதிவிடலாம்.

2002 -14 இடைப்பட்ட காலத்தில் பயின்று தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு இது மட்டுமே இறுதி வாய்ப்பு. இதையும் தவற விட்டால் தங்களது படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة