சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 08, 2023

Comments:0

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2023

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றம் சிவில் நீதிபதி பதவிக்கான 19 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விரும்பம் உள்ள வழக்குரைஞர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னரே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.34/2023

பணி: Civil Judge (Puducherry Judicial Service)

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.27,700 - 44,770

வயதுவரம்பு: 1.7.2023 தேயின்படி ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 25 முதல் 40 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 25 முதல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். நடப்பு ஆண்டில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர்கள் 22 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.2000. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews