சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، فبراير 02، 2023

Comments:0

சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி

A government school student who won gold at the world level in Silambam - சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி

சேலம் அருகே அரசுப்பள்ளி மாணவியான ரமணி உலக அளவில் அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்

எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தறி தொழிலாளியான ஆறுமுகம் - சுதா தம்பதி. இவர்களது இளைய மகள் ரமணி எடப்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிலம்பம் போட்டியில் சிறு வயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக அளவில் அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு, தங்கப்பதக்கமும் கோப்பையும் வென்று அசத்தியுள்ளார்.

கூலி வேலைக்குச் சென்று, தன்னையும் தன்னுடன் பிறந்த நான்கு பேரையும் வாடகை வீட்டில் வசித்தபடி மிகுந்த சிரமப்பட்டு தங்களை படிக்க வைக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ரமணி தங்கப்பதக்கத்தையும் கோப்பையையும் பெற்றோர்களிடம் வழங்கி ஆசி பெற்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.இதுகுறித்து ரமணி கூறுகையில், “எதிர்வரும் காலங்களில் உலக அளவிலான சிலம்பம் போட்டியிலும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியிலும் கலந்து கொண்டு, மேலும் பல்வேறு சாதனைகள் புரிய எனது பெற்றோரிடம் வசதி இல்லை. இதன் காரணமாக அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தால், தமிழ்நாட்டிற்கும் எனது கிராமத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் பல சாதனைகள் புரிய வாய்ப்பாக இருக்கும்.எதிர்காலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணங்களை எனக்குள் வளர்த்து வருகிறேன்.

ஆனால், குடும்பம் வறுமையில் உள்ளது. அதில் இருந்து மீளவும் கல்வி மேம்படவும் பள்ளி சென்று வர நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் கால்நடைகள் மேய்க்கிறேன்' என்கிறார் ரமணி.பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்து சிலம்பத்தில் சாதனைப் படைத்துள்ள ரமணிக்கு எண்ணங்கள் நிறைவேற அரசும் தன்னார்வலர்களும் முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة