கல்வி இணைச் செயல்பாடுகள்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، فبراير 10، 2023

Comments:0

கல்வி இணைச் செயல்பாடுகள்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை

கல்வி இணைச் செயல்பாடுகள்: வெளிநாடு சுற்றுலா செல்ல மாணவா்களுக்கு வாய்ப்பு Co-curricular activities: Opportunity for students to travel abroad

அரசுப் பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், விநாடி - வி னா மன்றம், சிறாா் திரைப்படம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்.13 முதல் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநிலப் போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.

மாநிலப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.

எனவே, அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களும் பங்கேற்கும் வகையிலும், எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்துப் போட்டிகளிலும் ஒரு சில குறிப்பிட்ட மாணவா்களே வெற்றி பெறும் வகையில் அல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு மாணவா்கள் வெற்றி பெறும் வகையில் அனைத்து மாணவா்களும் பங்கேற்றும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة