ஓவியத்தில் அசரடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، فبراير 12، 2023

Comments:0

ஓவியத்தில் அசரடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

ஓவியத்தில் அசரடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் Government school students are busy with painting



திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியில் உள்ளது கே.இ.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு, கொப்பூரைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ரமேஷ் மகன் ரத்தீஷ்சாமுவேல், 15; பிளஸ் 1 மாணவர்.

அரண்வாயல்குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மதன் மகன் தமிழரசு, 16; பிளஸ் 2 பயில்கிறார்.

இரண்டு மாணவர்களும், பார்த்தவுடன் ஓவியம் வரைவதில் அசரடித்து வருகின்றனர். அவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆச்சரியம் அடைந்து உள்ளனர். இரு மாணவர்களும் கூறியதாவது: சிறு வயதிலிருந்து, ஓவியத்தில் எங்களுக்கு தனி ஆர்வம் இருந்தது. எவ்வித சிறப்பு பயிற்சியும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. எங்கள் பள்ளி ஓவிய ஆசிரியர் ஹரிபாபு கொடுத்த பயிற்சி மற்றும் சக ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் திறம்பட வரைகிறோம்.

எங்களை ஊக்கப்படுத்த, தலைமையாசிரியர் சா.ஞானசேகர், ஜன., 26ம் தேதி குடியரசு தின விழாவில், நாங்கள் வரைந்த ஓவியங்கள், மற்ற மாணவர்களின் ஓவியங்களை சேர்த்து ஓவியக் கண்காட்சி நடத்தினார்.

தனியார் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவற்றை பார்த்து எங்களை பாராட்டியது மறக்க முடியாதது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோட்டோவியம், நவீன ஓவியம் மற்றும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைவதில் இரண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளதாக, பள்ளி ஓவிய ஆசிரியர் ஹரிபாபு தெரிவித்தார்.

CLICK HERE TO READ NEWS FULLY

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة