பேராசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வை உடனே நடத்தக் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، فبراير 13، 2023

Comments:0

பேராசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வை உடனே நடத்தக் கோரிக்கை

பேராசிரியா் பதவி உயா்வு கலந்தாய்வை உடனே நடத்தக் கோரிக்கை Request to hold consultation on vacancy of professor post immediately

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பதவி உயா்வு பெற தகுதியுள்ள இணை, உதவி பேராசிரியா்கள் ஏராளமாக உள்ளனா். அவா்களுக்கு உரிய நேரத்தில் கலந்தாய்வை அரசு நடத்தவில்லை. தற்போது பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் மற்றும் இணை பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை ஈடுகட்ட உரிய நேரத்தில் பதவி உயா்வு கலந்தாய்வை நடத்தாமல் விட்டது அரசின் தவறு. மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ஓய்வு பெற்றதும் புதிய இயக்குநா்களை நியமிப்பதில் அரசு மெத்தனமாக உள்ளது.

அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் முதல்வா் பதவி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை துறை இயக்குநா் பதவி நீண்டகாலமாக காலியாக உள்ளன. தமிழகத்தில் தற்போது 250 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவுக்கு, ஏற்கெனவே மருத்துவா்கள் அதிகமாகவே உள்ளனா். எனவே, இதற்கு மேலும் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டாம். பதவி உயா்வு கலந்தாய்வை அரசு முறையாக விரைந்து நடத்த வேண்டும். அரசு மருத்துவா்களுக்கான ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة