Income tax slab : Budget2023: புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 01، 2023

Comments:0

Income tax slab : Budget2023: புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

Income tax slab :Budget2023:புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு!எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

new income tax slabs:புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் எத்தகைய வரியும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை என்ற அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேசமயம், பழைய வரிவிதிப்பு முறை தொடரும். இந்த வரிவிதிப்பு முறையிலும் ஐடி ரிட்டன் தாக்கல் செய்து, வரிவிலக்கு, முதலீட்டு, செலவுக் கழிவுகளை அரசிடம் இருந்து பெற முடியும்.
அதேசமயம், புதிய வருமானவரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பவர்கள் எந்தவிதமான முதலீட்டுக் கழிவுகளையும், விலக்குகளையும் அரசிடம் இருந்து பெற முடியாது. 

ஆனால், ரூ.50 ஆயிரம்வரை நிரந்தரக் கழிவு மட்டும் பெறலாம் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பழைய வரிவிதிப்பு முறையில் இதேபோன்ற கழிவுகள் இருப்பதால், ரூ.5 லட்சம்வரை வருமானம் இருப்போர் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2.50 லட்சம் வரை பழைய வரிவிதிப்பு முறையில் இருந்தது.

இந்த புதிய வரிவிதிப்பு முறையால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம்வரை ஊதியம் ஈட்டுபவர் ரூ.33,800 வரை சேமிக்க முடியும். 

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.23,400 வரையிலும், ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர் ரூ.49,400வரை சேமிக்க இயலும். உயர்வருமானம் உள்ள பிரிவினரான ஆண்டுக்கு ரூ.2 கோடிவரை வருமானம் ஈட்டுவோருக்கான சர்சார்ஜ் 37சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதன் மூலம் ரூ.5.50 கோடி வருமானம் ஈட்டுவோர் ரூ.20 லட்சம்வரை சேமிக்க முடியும்.

புதிய வருமானவரி முறையின் படி ஆண்டுக்கு ரூ.3 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விதிப்புக்குள் வரமாட்டார்கள்.

ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரிவதிக்கப்படும்.

 ரூ.6 முதல் ரூ.9 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் வரிவிதிக்கபப்டும்.

ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரிவிதிக்கப்படும்

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். 

ரூ.15.5 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோர் கூடுதலாக ரூ.52.500வரை நிரந்தரக் கழிவு பெறலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة