யூடியூபில் சம்பாதிக்கும் 10ம் வகுப்பு மாணவன்! காவலாளியின் மகனைப் பாராட்டும் பள்ளி!
மும்பையில் 10ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் ஒருவர், யூடியூபில் லட்சக்கணக்கில் மக்களை ஈர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்.
இரவு காவலாளியாக பணிபுரிந்து வருபவரின் மகன், எந்தவித வசதிகளுமின்றி வருவாய் ஈட்டி, மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக மும்பை பள்ளிக் கல்வித் துறை பாராட்டியுள்ளது.
மும்பை புறநகர்ப் பகுதியில் வசித்து வருபவர் அங்கித். 10ஆம் வகுப்பு பயிலும் இவரின் தந்தை இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அங்கித், கரோனா பொதுமுடக்ககத்தால் இணையவழி வகுப்புகளுக்காக அவரின் தந்தை ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்துள்ளார்.
அதில் வகுப்புகளை கவனித்து படித்து வந்த அங்கித், சொந்தமாக யூடியூப் சேனலை ஆரமித்து அதில் தான் விளையாடும் டிஜிட்டல் கேம்ஸ் குறித்து விடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளில் தற்போது லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்கின்றனர். யூடியூபிலிருந்து சில்வர் அங்கீகாரமும் (சில்வர் பட்டன்) கிடைத்துள்ளது. இதன்மூலம் அவரின் குடும்பத்துக்குத் தேவையான வருவாயை அவரே ஈட்டுகிறார்.
ஏழ்மை குடும்பத்தில் பிறந்து எந்தவித உபகரணங்களின் வசதியும் இல்லாமல், யூடியூபில் வருவாய் ஈட்டும் அங்கித், மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக மும்பை பள்ளிக் கல்வித் துறை பாராட்டியுள்ளது.
மேலும் தனது சுட்டுரைப் பக்கத்தில் மாணவரின் புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.