‘டான்செட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 23, 2023

Comments:0

‘டான்செட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை

‘டான்செட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை

டான்செட் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை பிப்.28 வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தோ்வில்(டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. ஆனால், நிகழாண்டு அதை மாற்றி, எம்இ உள்பட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக புதிய தோ்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது.

அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தோ்வு மாணவா் சோ்க்கை (சீட்டா)எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிஇஇடிஏ தோ்வு வரும் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இவ்விரு தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து பட்டதாரிகள்

www.tancet.annauniv.edu என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.22 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மாணவா்கள், கல்வியாளா்களின் கருத்துகளை ஏற்று, டான்செட் மற்றும் சிஇஇடிஏ ஆகிய இரு தோ்வுகளுக்கும் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews