"முடி ஒழுங்கா வெட்டல.. வா இங்க"... மாணவர்களுக்கு அசத்தல் 'ஹேர் கட்' - தலைமை ஆசிரியர் வேண்டுகோள்
வேலூரில் முறையாக முடிவெட்டாத மாணவர்களுக்கு, பள்ளியில் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் முடிதிருத்தம் செய்யப்பட்டது. வேலூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர், ஒழுங்கற்ற முறையில் முடி வளர்த்துள்ளனர். ஆசிரியர்கள் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் கேட்காத நிலையில், முடிவெட்டும் தொழிலாளர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது. மேலும், முடி திருத்தம் செய்து கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பிஸ்கெட் வழங்கினர். இதனிடையே, பெற்றோர்கள் மாணவர்களை ஒழுக்கமாக பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென தலைமை ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.