அழகு கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 03, 2023

Comments:0

அழகு கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அழகு கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Adi Dravidian-tribal students can apply for beauty arts training

அழகு கலை பயிற்சி பெற ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக பல்வேறு அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம், சுய தொழில் செய்யவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை ேசர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி காலம் 45 நாட்களாகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சிக்கான அனைத்து செலவும் தாட்கோவால் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகார தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சியை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் பெறவும், மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்யவும் தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும். இப்பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை, மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ்பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி தாட்கோ மூலமாக அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர் பழங்குடியினத்தை சார்ந்த 10ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பெறலாம். மேலும் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும். மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை 044-25246344, 9445029456 ஆகிய எண்களில் அணுகவும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews