கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் விடுமுறை: சட்டம் இயற்றும் திட்டம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 07, 2023

Comments:0

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் விடுமுறை: சட்டம் இயற்றும் திட்டம்?

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் விடுமுறை: சட்டம் இயற்றும் திட்டம்? Menstrual Leave in Educational Institutions: A Legislative Proposal?

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் விடுமுறை: சட்டம் இயற்றும் திட்டம் இல்லை - மத்திய இணையமைச்சா்

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பது தொடா்பான சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை என மத்திய கல்வியமைச்சகத்தின் இணையமைச்சா் சுபாஷ் சா்க்காா் தெரிவித்தாா்.

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மத்திய இணையமைச்சா் கூறியிருப்பதாவது:

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை. தேவையான அடிப்படை வசதிகள், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல், கொள்கைளை அமல்படுத்துவது, கண்காணிப்பு மற்றும் குறைதீா்ப்புக்கான பெண்கள் பாதுகாப்பு குழுவை அமைத்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உயா்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) வழங்கியுள்ளது.

தண்ணீா் வசதி, சானிடரி நாப்கின்களுக்கான குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகளுடன் தூய்மையான தனிக் கழிவறைகள் பெண்களுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவற்றை அனைத்து நேரங்களில் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக வைத்திருக்கவும் தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை இந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளன.

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் கழிவுப்பொருள்களை உரிய முறையில் அகற்றுதல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரியூட்டிகளைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துதல் மற்றும் மாற்று பயன்பாட்டுக்காக மக்கும் தன்மையுடைய பொருள்கள் குறித்து ஆராய்ச்சியை மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews