CUET 2023 - நுழைவுத் தோ்வு: கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு 15-20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، فبراير 23، 2023

Comments:0

CUET 2023 - நுழைவுத் தோ்வு: கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு 15-20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம்



CUET 2023 - Entrance Test: 15-20 minutes extra for Maths, Accounts Papers

CUET 2023 - நுழைவுத் தோ்வு: கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு 15-20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் (க்யூட்) கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களை எழுதும் மாணவா்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். யுஜிசி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிவித்ததன் அடிப்படையில், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை பிளஸ்-2 மதிப்பெண்அடிப்படையில் அல்லாமல், க்யூட் நுழைவுத் தோ்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி தோ்வு வரும் மே 21 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு மாா்ச் 12-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில், க்யூட்-யுஜி தோ்வில் கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. க்யூட் தோ்வில் கணிதம் மற்றும் கணக்குப்பதிவியல் தாள்களை எழுதும் மாணவா்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தோ்வில் மொழிப் பாடம் உள்பட ஓா் மாணவா் தெரிவு செய்யும் அதிபட்ச பாடங்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة