ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா?
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானர்களிடமிருந்து மார்ச் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்.
காலியிடங்கள்: 2.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000.
வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி எம்பிசி பிரிவினர்கள் 18 முதல் 32 வயதிற்குள்ளிருக்குள்ளும், SCA பிரிவினர்கள்18 முதல் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி(சைக்கிள்) ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tiruvarur.tn.nic.in
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கொடுக்கப்பட்டு அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மார்ச் 10 தேதிக்கு முன்ன்ர் விண்ணப்பிக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகதேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்கள் அறிய www.tiruvarur.tn.nic.in
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.