ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் பணி - காலியிடங்கள்: 761 - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يناير 23، 2023

Comments:0

ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் பணி - காலியிடங்கள்: 761 - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2023

ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? Road Inspector Post at Rs.71,900 Salary - Vacancies: 761 - Last Date to Apply: 11.2.2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: சாலை ஆய்வாளர்

காலியிடங்கள்: 761

வயதுவரம்பு: ஆ.தி, ஆ.தி(அ), பழங்குடியினர், மிபிவ, சீம, பி.வ, பி,வ(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: தாள்-1 பாடத்தாள்(தொழிற்பயிற்சி தரம்) 7.5.2023 அன்று காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், தாள்-2 அன்றைய நாள் பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.

கட்டணம்: நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2023

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة