எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை விவரங்கள்: இணையவழியில் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை ஜன. 10-ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். நீட் தோ்வு தகுதி அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையிலுமே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்.
அதன்படி, நிகழாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் கடந்த 31-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அவகாசம் ஜன. 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.