பாடங்களை முழுவதுமாக நிறைவு செய்ய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يناير 26، 2023

Comments:0

பாடங்களை முழுவதுமாக நிறைவு செய்ய உத்தரவு



பாடங்களை முழுவதுமாக நிறைவு செய்ய கல்லூரிகளுக்கு உத்தரவு Order to complete the subjects completely

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும் மாணவா்களுக்கு மே 1-ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில், 1.3 லட்சத்துக்கும் அதிகமான இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை 2022 ஆகஸ்ட் தொடங்கி நவம்பா் வரை நடைபெற்றது. இதன்காரணமாக, முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை வரும் மே 1-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய கல்லூரிக் கல்வி இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் அனைத்து மாவட்ட இணை இயக்குநா்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டு நவ. 19 வரை நடைபெற்றது.

இதனால், பேராசிரியா்கள் பாடங்களை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் முழுமையாக முடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான பாடங்களை வரும் மே 1-ஆம் தேதிக்குள் பேராசிரியா்கள் நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தலாம். தேவை இருப்பின் கூடுதல் நேரங்களில் வகுப்புகள் எடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة