போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يناير 23، 2023

Comments:0

போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை

போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை Controversy due to publication of competitive exam designer list

கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிட தேர்வுக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர்களின் விபரங்கள் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, போட்டி தேர்வு மூலம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ரகசியமானது

இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் முயற்சியில் கல்லுாரிக் கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது.

பாடத்திட்டம் வடிவமைப்பதற்காக, பாட வாரியாக துறை சார்ந்த நிபுணர்கள் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த சுற்றறிக்கை, கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தியிடம் இருந்து, தொடர்புடைய பேராசிரியர்களுக்கு, அந்தக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது.

பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பேராசிரியர்களின் பெயர்கள், துறை வாரியாக, 14 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் ரகசியமானது; வெளியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளங்களில், சுற்றறிக்கையோடு சேர்த்து, பாடம், துறை நிபுணர்களின், பணி விபரம், பணிபுரியும் கல்லுாரி, தொடர்பு எண் ஆகியவையும் பரவலாக பகிரப்படுகிறது.

கேள்விக்குறி

பேராசிரியர்கள் கூறியதாவது:

ரகசியமாக வைக்க வேண்டிய பெயர்ப்பட்டியல் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளது. எனில், பாடத்திட்டங்கள் குறித்த தகவல் எந்த அளவுக்கு ரகசியம் பேணப்படும் என்பது கேள்விக்குறி தான்.

இதைக்கூட கவனமாக கையாளாதவர்கள், தேர்வை எப்படி நடத்துவர். இந்தப் பொறுப்பை, டி.என்.பி.எஸ்.சி., வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இவ்வாறு கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة