கோயில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يناير 26، 2023

Comments:0

கோயில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு High Court orders publication of application for appointment of temple trustees

கோயில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பத்தை பிப்.8ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் அறங்காவலர்கள் நியமன விண்ணப்பங்களை பிப்ரவரி 8ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை முடிக்க அவகாசம் வழங்கப்படும். மேலும், 10 மாவட்டங்களில் அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட வாரியான தேர்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், மீதமுள்ள 29 மாவட்டங்களில் விரைவில் குழுக்கள் அமைக்க வேண்டும். அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8ம் தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة