UGC NET Exam: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يناير 21، 2023

Comments:0

UGC NET Exam: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது நீட்டிட்டுள்ளது

UGC NET Exam: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு UGC NET Exam: Extension of deadline to apply for the post of Assistant Professor

UGC- NET Exam எனப்படும் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி தகுதித்தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

முன்னதாக, 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. ஜனவரி 17ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பித்த காரணத்தினால், இணையவழி விண்ணப்பத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் சமர்ப்பிப்பதில் தொழிநுட்ப தாமதங்கள் ஏற்பட்டதாக விண்ணப்பதாரர்கள் குற்றம் சாட்டினார். எனவே, விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது நீட்டிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஜனவரி 23ம் தேதி இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என்றும் அன்றிரவு 11.50 மணிக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, UGC-NET தேர்வு எழுத ஆர்வமும், தகுதியும் உள்ள அனைத்து மாணவர்களும் தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரி https://jeemain.nta.nic ஆகும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة