ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يناير 28، 2023

Comments:0

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்! Exam for Teacher Eligibility Test 2nd paper starts on 3rd February!

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித்தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.2.2023 முதல் 12.2.2023 வரை இரண்டு வேளைகளிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த 3 ஆம் தேதி தேர்வு வாரிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சனிக்கிழமை(ஜன.28) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக் கூட நுழைவுச் சீட் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது பயன்பாட்டு முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة