SBI PO Exam: SBI புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 18، 2023

Comments:0

SBI PO Exam: SBI புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

SBI PO Exam: SBI புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: எவ்வாறு தெரிந்து கொள்வது - SBI PO Exam: SBI Probationary Officer Prelims Result Release

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட புரோபேஷனரி ஆபிஸர் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட புரோபேஷனரி ஆபிஸர் பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன

கடந்த 2022, டிசம்பர் 17 முதல் 20ம் தேதி வரை எஸ்பிஐ வங்கியின் புரோபஷனரி ஆபிஸர் 1,673 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு(ப்ரீலிம்ஸ்) நடந்தது.

இதில் 1600 பணியிடங்கள் வழக்கமான காலியிடங்களுக்கும், 73 மண்டல காலியிடங்களுக்கும் நடந்தது. 18 இடங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், 36 இடங்கள், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 21 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் நடந்தது.

 இந்த புரோபேஷனரி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், எஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களாவர்.

இந்த புரோபேஷனரி தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது

1.    எஸ்பிஐ இணையதளமான sbi.co.in.க்கு செல்ல வேண்டும்

2. கேரீயர்ஸ் டேப் பட்டனை அழுத்த வேண்டும்

3.    அதில் புரோபேஷனரி ஆபிஸர் ப்ரீலிம்ஸ் தேர்வு என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்

4.    உங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.

5. இந்த தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து பிரின்ட் அவுட் எடுத்து அடுத்த கட்ட தேர்வுக்கு சேமிக்கலாம்.

புரோபேஷனரி ஆபிஸர் முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விரைவில் முதனிலைத் தேர்வுக்கான விடைத் தொகுப்பு வெளியிடப்படும். புரோபேஷனரி ஆபிஸருக்கான மெயின் தேர்வு வரும் 30ம் தேதி நடக்கிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة