வினாத்தாள் கசிவு: குஜராத்தில் அரசுத் தேர்வு ஒத்திவைப்பு Question paper leak: Postponement of state exam in Gujarat
குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆள்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய இஸாம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தேர்வின் வினாத்தாள் நகல் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தேர்வு எழுத ஜாம்நகர் மையத்திற்குச் சென்ற மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், குற்றவாளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இன்று காலை 11 மணி முதல் நடைபெறவிருந்த தேர்வில் 9.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குஜராத் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.