ஜன.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் Private employment camp on 28 Jan
நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜனவரி 28-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் ஜனவரி 28-ஆம் தேதி பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில், படித்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடையலாம். வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் சுய விவரக்குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.