வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை : விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 25, 2023

Comments:0

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை : விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை : விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அழைப்பு Monthly stipend for unemployed youth: Chennai Collectorate invites applications

Unemployment Assitance Fund: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு உதவித் தொகை வழங்கி வருகிறது. சென்னையில் உள்ள தகுதியான விண்ணப்பத்தார்கள் விண்ணப்பப் படிவத்தை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார் திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்

அடிப்படைத் தகுதிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் குடும்ப ஆண்டு வருமானம் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மேல் இருக்கக் கூடாது. மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை. வயது வரம்பு 40 வயதுகுட்பட்டு இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் 45 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

நிபந்தனைகள் தனியார் நிறுவனங்களில் பணி புரியாதாவராகவும், சுய தொழில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளி மாணவ/மாணவிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

அதேபோன்று, ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. NO.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews