மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يناير 29، 2023

Comments:0

மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023

மதுரை மாநகராட்சியில் 8 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 31 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு மதுரை மாநகராட்சி (Madurai Corporation) ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

செவிலியர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : M.Sc Nursing or B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000

மருந்தாளுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 9

கல்வித் தகுதி : D.Pharm or B.Pharm படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

ஆய்வக நுட்புனர் காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

மருத்துவமனை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாநகர் நல அலுவலர், 3வது மாடி, பொது சுகாதாரப் பிரிவு, ’அறிஞர் அண்ணா மாளிகை’, மதுரை மாநகராட்சி, தல்லாகுளம், மதுரை – 625002.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/15coVLvfavvAofZmAgpWGq8xMWbpV7FIR/view என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة