தமிழ்நாடு வேளாண் அலுவலர் பணிக்கு பிப்ரவரி 10ம் தேதி விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 13, 2023

Comments:0

தமிழ்நாடு வேளாண் அலுவலர் பணிக்கு பிப்ரவரி 10ம் தேதி விண்ணப்பம்

தமிழ்நாடு வேளாண் அலுவலர் பணிக்கு பிப்ரவரி 10ம் தேதி விண்ணப்பம்

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக் கலை அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான போட்டித் தேர்வு எழுத விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்) 37 முன்கொணர்வு பணியிடங்கள், வேளாண் உதவி இயக்குநர் (விரிவாக்கம்) 8 பணியிடங்கள்,தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் 8 தோட்டக் கலை அலுவலர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும். இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி 10ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். வேளாண்மை அலுவலருக்கான தேர்வு தாள்1(வேளாண்மையியல்)மே 20ம் தேதி நடக்கும். வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். வேளாண்மை அலுவலர், வேளாண் உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கான தாள்2க்கான தேர்வு மே 20ம் தேதி நடக்கும். தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தாள் 1 தேர்வு மே 21ம் தேதி நடக்கும். இந்த பணிக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நடக்கும். தாள்1ல் கொள்குறி வகையில் 200 கேள்விகள் இடம் பெறும். தேர்வு நேரம் 3 மணி நேரம்,மொத்த மதிப்பெண்கள் 300, தேர்வுக்கு தகுதி பெற குறைந்த பட்சம் 204 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்சி(அ)ப.ப, மிகவும் பிற்பட்டவர், சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர்(மு), ஆகியோர் 153 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தாள் 2க்கான தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். மொத்த மதிப்பெண்கள் 150, நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள்வழங்கப்படும். தேர்வு மையங்கள் 38 மாவட்டங்களில் அமைக்கப்படும். இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த ஆவணங்கள், சான்றுகள் மாற்ற, பதிவேற்ற, மீள்பதிவேற்றம் செய்ய மே 7ம் தேதி இரவு வரை அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews