அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 19, 2022

Comments:0

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்



அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், ‘நம்ம ஸ்கூல்’ என்னும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயா்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவா்களும், தொழிலதிபா்களாக உள்ள முன்னாள் மாணவா்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணா்வு நிதி (சி.எஸ்.ஆா்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை (டிச.19) நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைத்து அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறாா்.

இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவா்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிா என்பதையும் நிதி வழங்கியவா்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவா் விஸ்வநாதன் ஆனந்த், ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேசன் தலைவா் வேணு சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews