நாளை TNPSC GROUP-1 தேர்வெழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 18، 2022

Comments:0

நாளை TNPSC GROUP-1 தேர்வெழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு



நாளை நடைபெறும் TNPSC GROUP-1 தேர்வர்கள் கவனத்திற்கு

காலை உணவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்...

தேர்வினை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவும்

அடிப்படை குறிப்புகள்..

1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)..

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. .

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
  --> ஆதார் அட்டை
  --> பாஸ்போர்ட்
  --> ஓட்டுநர் உரிமம்
  --> பான் அட்டை
  --> வாக்காளர் அடையாள அட்டை

4) OMR இல் *இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும்* (தேர்வு தொடங்கும் முன் - 1, முடிந்த பின் - 1), *ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression)* (தேர்வு முடிந்த பின்) வைக்க வேண்டும். (அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும்)
(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR-ஐ கையாளவும்)

5) Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade செய்யவும். 

6) எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும். 

7) A, B, C, D, E - ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 - 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை *தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.* 

8) Shade செய்ய கண்டிப்பாக *கருப்பு நிற பந்து முனை பேனாவினை* (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். .

9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் passport அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, Reg. Number, கையொப்பம், நுழைவுச்சீட்டின் Xerox Copy, மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் Xerox copy உடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்..

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة