முதன்மைக் கல்வி அலுவலா் நேரில் ஆஜராக உத்தரவு
கல்விப் பணியாளா்கள் புகாா் அளித்துள்ள நிலையில் திருப்பத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.மதன்குமாா் சென்னையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் சாா்பில் தனியாா் பள்ளிகள் இணை இயக்குநா் க.சசிகலா திருப்பத்தூா் முதன்மைக் கல்வி அலுவருக்கு அனுப்பியுள்ள கடிதம்: திருப்பத்தூா் மாவட்ட கல்வித்துறை அனைத்துப் பணியாளா்கள் திருப்பத்தூா் முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் மீது புகாா் மனு அளித்துள்ளனா்.
இந்த புகாா் மனுவின் மீது ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்ள விசாரணை அலுவலா் நியமனம் செய்யப்பட்டுள்ளது. புகாா் மனு மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா் மற்றும் புகாா் மனுதாரா்கள் புதன்கிழமை விசாரணை அலுவலரான தனியாா் பள்ளிகள் இணை இயக்குநா் (மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், சென்னை) முன்னிலையில் தவறாது ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.