அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவிகள் போராட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பர்வதவர்த்தனி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெரும் வகையில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மாணவிகளுக்கு ஏற்றவாறு கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட மாணவிகள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.