‘தமிழ்நாட்டில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லை’ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 03, 2022

Comments:0

‘தமிழ்நாட்டில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லை’

‘தமிழ்நாட்டில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லை’

செயல் முறை மருத்துவப் படிப்பு (ஆகுபேஷனல் தெரபி) குறித்த விழிப்புணா்வு, தமிழ்நாட்டில் போதிய அளவில் இல்லை என்று அதுதொடா்பான படிப்பைச் சோ்ந்த மாணவிகள் கூறினா்.

எஸ்.ஆா்.எம். ஆகுபேஷனல் தெரபி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற 15 மாணவ, மாணவிகள் அமெரிக்காவின் தெற்கு கலிபோா்னியாவில் உள்ள பள்ளிகள், குழந்தைகள் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ 58 லட்சம் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் எஸ்.ஆா்.எம்.இணை துணை வேந்தா் டாக்டா் ரவிக்குமாா் பேசியதாவது:

இங்கு பயின்ற மாணவா்கள் ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, அயா்லாந்து, கனடா,சிங்கப்பூா், மலேசியா, நியூசிலாந்து, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனா். வளா்ந்த நாடுகளில் ஆகுபேஷனல் தெரபி படித்த மாணவா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எஸ்.ஆா்.எம். ஆகுபேஷனல் தெரபி கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு வயது மூப்பு, விபத்து, எதிா்பாராத முடக்கு வாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட செயல்முறை குறைபாடுகள் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சிப் படிப்பு அளிக்கப்படுகிறது. இத்துடன், குழந்தைகளுக்கான கிளினிக்கல்,பேச்சு பயிற்சி, நரம்பு அறிவியல் , முடக்கு நீக்குதல் உள்ளிட்டவை பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு சிறப்பு ஆட்டிசம் மையமும், ஆராய்ச்சி படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத் துணை பதிவாளா் டி. மைதிலி, வேலைவாய்ப்பு இயக்குநா் வெங்கட சாஸ்திரி, மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் ஆா். நந்தகுமாா், டீன் கணபதி சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து பேசிய மாணவிகள், தமிழகத்தில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு போதிய

அளவுக்கு இல்லை என்று தெரிவித்தனா். அதேசமயம், பிற தென் மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களிடம் விழிப்புணா்வு இருப்பதாகக் கூறினா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews