அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மது அருந்திவிட்டு தாக்கிய 12ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு
தலைமை ஆசிரியரை தாக்கிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளை கேலி செய்ததாக புகார் வந்ததையடுத்து, மாணவனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் கண்டித்துள்ளார்.
இதனால் கோபத்துடன் பள்ளியைவிட்டு வெளியே சென்ற மாணவன், மது அருந்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் அழைத்து எச்சரித்துள்ளார்.
இதனால் மாணவன் தாக்கியதில் பின்தலையில் காயமடைந்த தலைமை ஆசிரியர், அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கண்டமங்கலம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவர் இடைநீக்கம்
புகாருக்குள்ளான மாணவரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவு

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.