அரசுப் பள்ளிகளுக்கு மானியத் தொகை விடுவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 02, 2022

Comments:0

அரசுப் பள்ளிகளுக்கு மானியத் தொகை விடுவிப்பு

அரசுப் பள்ளிகளுக்கு மானியத் தொகை விடுவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மானியைத் தொகையை பள்ளிக் கல்வித் துறை விடுவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாநிலத் திட்ட இயக்ககம், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி பாராமரிப்பு மானியத் தொகையை ஒதுக்கீடு செய்து அனுப்பியுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவா்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலும் மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 30 மாணவா்கள் எண்ணிக்கையில் 8- ஆம் வகுப்பு வரையில் 11,251 பள்ளிகளிலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு பராமரிப்பு நிதியாக தலா ரூ. 10 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று 31 முதல் 100 மாணவா்கள் 1 முதல் வரையில் 8-ஆம் வகுப்பு வரையில் 13 ஆயிரத்து 27 பள்ளிகளிலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் 567 பள்ளிகளில் படிக்கின்றனா். இந்தப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா ரூ. 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 101 முதல் 250 வரையிலான மாணவா் எண்ணிக்கையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் 6,111 பள்ளிகளிலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் 2,253 பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் எண்ணிக்கையின் படி தலா 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி பள்ளி வகுப்பறை, வளாகத் தூய்மை, தூய்மையான குடிநீா், கை கழுவும் வசதி ஏற்படுத்துதல், கழிப்பறைத் தூய்மை, சுற்றுச்சுவா் பராமரிப்பு போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews