10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 23, 2022

Comments:0

10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

மா.போ.க இயக்க பிரிவு - மா.போ.கழக பேருந்துகளில் நடத்துநர்கள் ரூ.10/- & ரூ.20/-மதிப்பிலான நாணயத்தை பெற மறுப்பது ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தினை பயணிகள் பயணச்சீட்டு பெற அளிக்கும்போது மறுப்பின்றி பெற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டை அளிப்பது தொடர்பாக - அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.

பார்வை:

1. தலைவர் அலுவலகம், போ.வது கடித எண்.130/Ch3/Ch.O/ 2022, நாள்:08.11.2022

2. க.எண்.174/15674/போ(பொது1)/மாபோக/2019,ாள்.22.08.2019

மா.போ.கழக பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும்போது உரிய பயணச்சீட்டினை பெற ரூ.10/- மதிப்பிலான நாணயங்களை நடத்துநர்கள் மறுப்பின்றி பெற்று உரிய பயணச்சீட்டினை பயணிகளுக்கு வழங்குமாறு ஏற்கனவே பார்வை-2ல் காணும் இவ்வலுவலக சுற்றறிக்கை வழி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், பார்வை-1ல் காணும் போக்குவரத்துத் துறை, தலைவர் அலுவலக கடிதத்தில் மா.போ.கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் தமது பணியின்போது, பயணிகள் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தை பயணச்சீட்டு வாங்க அளிக்கும்போது நடத்துநர்கள் பெறமறுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அனைத்து அரசு போக்குவரத்துக்கழக நடத்துநர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் வெளியிடப்படும் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தை பயணிகள் பயணச்சீட்டு வாங்க மா.போ.கழக பேருந்துகளில் நடத்துநரிடம் அளிக்கும்போது அதனை நடத்துநர்கள் மறுக்காமல் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டு அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என இதன் மூலம் மீண்டும் உத்திரவிடப்படுகிறது. எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தை பெற்றுக்கொள்ள நடத்துநர்கள் மறுக்கக்கூடாது. அவ்வாறு நடத்துநர்கள் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தினை பெற்றுக்கொள்ள மறுப்பதாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அனைத்து கிளை மேலாளர்கள். உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் அனைத்து நேரக்காப்பாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர் காலத்தில் இத்தகைய புகார் எதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews