வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 27, 2022

Comments:0

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

வணிக நிறுவனங்கள் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மேலும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.

வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம், வணிக நிறுவனங்கள் செய்வதற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 ஆம் தேதி நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

அதாவது, வருமான வரி சட்டம் பிரிவு 139 இன் துணைப் பிரிவு(1) இன் கீழ் 2022-23 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், இந்த கால கெடுவை வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு நிறுவனங்கள் 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை அக்டோபர் 31 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். பரிமாற்ற விலை விதிமுறைகளுக்கு உள்பட்ட நிறுவனங்கள் நவம்பர் 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இது தொடர்பான சுற்றறிக்கையை www.incomectaxindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews