காஞ்சிபுரம் பள்ளிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 11, 2022

Comments:0

காஞ்சிபுரம் பள்ளிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

மத்திய கல்வித் துறை மற்றும் வெளியுறவு துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், நேற்று காஞ்சிபுரம் பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், இரண்டு நாள் பயணமாக காஞ்சிபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்திருந்தார்.

முதல் நாள் நிகழ்ச்சியாக, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இரண்டாம் நாள் பயணமாக நேற்று காலை 10:30 மணிக்கு, காஞ்சிபுரம் அருகில் உள்ள புத்தேரி அங்கன்வாடி மையத்திற்கு சென்றார்.

அப்போது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை பெற்றோரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, புத்தேரி பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவன உறைவிட பள்ளியில் பயிலும் மாணவர்களின் கராத்தே மற்றும் யோகா வகுப்புகளையும் பார்வையிட்டு, மாணவர்களிடையே உரையாடினார்.

காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கணினி ஆய்வகத்தை பார்வையிட்டவர், மாணவியரிடம் கலந்துரையாடினார்.

இதையடுத்து முத்தியால்பேட்டையில், மத்திய அரசின் 'சமகர சிக்சா' திட்டத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிக்கான பள்ளியில், மாணவ- - மாணவியரை சந்தித்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் செயல்பாடு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

இறுதியாக, களியனுார் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுவிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் பிற துறை அதிகாரிகள்உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews