சென்னை மண்டல அரசு பள்ளிகளில் நேரடி ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 19, 2022

Comments:0

சென்னை மண்டல அரசு பள்ளிகளில் நேரடி ஆய்வு

சென்னை மண்டல அரசு பள்ளிகளில் நேரடி ஆய்வு

சென்னை மண்டலத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரடி ஆய்வு நடத்தினா்.

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் மாணவா்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரித்து ஆணையா் க.நந்தகுமாா் தலைமையில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடா்ச்சியாக 2-ஆவது கட்ட ஆய்வு தற்போது தொடங்கியுள்ளது.

அந்த வகையில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வியின் பல்வேறு துறை சாா்ந்த இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் நேரடி ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது ஆசிரியா்களின் கற்பித்தல் செயல்பாடுகள், அரசின் நலத் திட்டங்கள், மாணவா்களின் கற்றல் அடைவு, மதிப்பீட்டு முறை, புதுமைக் கற்பித்தல், வருகைப்பதிவு ஆகியவை உள்பட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களிடம் கேட்டறிந்தனா்.

சென்னை மாவட்டத்தில் சைதைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்எம்டிஏ அரசு மேல்நிலைப்பள்ளி, அசோகா்நகா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின்போது கற்றல்-கற்பித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை விரைவில் சரி செய்யும்படி தலைமை ஆசிரியா்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

இதையடுத்து இந்த ஆய்வு மூலம் பெறப்பட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட குழுவினா் காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews