வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு இந்த மாதிரியான பாலிசிகளை எடுங்கள்.. மொத்த செலவும் குறையும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أكتوبر 02، 2022

Comments:0

வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு இந்த மாதிரியான பாலிசிகளை எடுங்கள்.. மொத்த செலவும் குறையும்!

வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு இந்த மாதிரியான பாலிசிகளை எடுங்கள்.. மொத்த செலவும் குறையும்!

நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வழங்கப்படும் குழு காப்பீடு திட்டத்தில் உங்கள் பெற்றோரை இணைத்துக் கொள்ளலாம்.

மருத்துவ செலவுகள் அதிகரித்து விட்ட இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் அவசியமானதாகிறது. குறிப்பாக, வயது சார்ந்த நோய்களை எதிர்கொள்ளும் முதியவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், பெரும் செலவுகள் ஏற்படும் வரையிலும் பலர் இதை உணருவதே கிடையாது.

ஒருவேளை நம் தாய், தந்தைக்கு மருத்துவக் காப்பீடு வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடம் இருந்தாலும் கூட, நாம் பணியாற்றும் நிறுவனத்தில் வழங்கப்படும் காப்பீட்டை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறோம். திடீரென்று வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டால் என்ன ஆவது? புதிய நிறுவனத்திற்கு செல்லுகையில் அவர்களும் தற்போதுள்ளதைப் போல ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நமக்கு வழங்குவார்களா? எதுவும் நிச்சயம் கிடையாது.

ஆக, மூத்த குடிமக்களுக்கு எப்போதுமே தனிநபருக்கான மருத்துவக் காப்பீடு எப்போதுமே அவசியமானது. சிலர் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தையும் தேர்வு செய்கின்றனர். ஆனால், தனிநபர் காப்பீட்டை காட்டிலும் குரூப் இன்சூரன்ஸ் என்னும் குழு காப்பீடு திட்டம்தான் அதிக பலன்களை கொண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

குழு காப்பீடு திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் :

உத்தரவாதம் அளிக்கப்படும் காப்பீடு :

நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வழங்கப்படும் குழு காப்பீடு திட்டத்தில் உங்கள் பெற்றோரை இணைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் உங்கள் பெற்றோருக்கு ஏற்கனவே என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் ஆராயமல் காப்பீடு வழங்கப்படும். ஆனால், இது மினிமம் என்ரோல்மெண்ட் ரேசியோ என்ற வரம்புக்கு உட்பட்டதாகும்.

காத்திருப்பு காலம் கிடையாது :

குழு காப்பீடு திட்டத்தில் உள்ள மற்றொரு பலன் என்னவென்றால் இதில் காத்திருப்பு காலம் கிடையாது. நீங்கள் மருத்துவமனையில் சேரும் முதல் நாளில் இருந்தே அனைத்து செலவுகளும் இதில் கவர் செய்யப்படும். உங்கள் நோய் பாதிப்பு ஏற்கனவே இருந்ததா அல்லது புதிதாக வந்ததா என்றெல்லாம் பார்க்கப்பட மாட்டாது. ஆனால், வழக்கமான பாதிப்புகளில் 2 ஆண்டு காத்திருப்பு காலம் உண்டு.

பெரும்பாலான பில்கள் கவர் செய்யப்படும் :

கோ-பே என்றொரு வாய்ப்பு குழு காப்பீடு திட்டத்தில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையில் கோ-பே பலனை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இந்த கோபே என்பது 20 முதல் 30 சதவீதமாக இருக்கிறது.

அதிகரிக்கப்பட்ட உள்வரம்புகள்

குழு காப்பீடு திட்டத்தில் உள்ள 4ஆவது பலன் என்னவென்றால் இதில் உள் வரம்புகள் அதிகரிக்கப்படும் என்பதுதான். குறிப்பாக, குழு காப்பீடு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவமனை அறை வாடகைக்கு கூடுதல் பணம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, எந்த நோய்க்கு சிகிச்சை பெற்றாலும், அதே பலனை பெற முடியும். நோய் வாரியாக அறை வாடகை மாறும் என்ற நிபந்தனை மூத்த குடிமக்களுக்கு பொருந்தாது.

இது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் நோ-கிளைம் போனஸ், உங்கள் கிளைம் ஹிஸ்டரியை பொருட்படுத்தாமல் செய்யப்படும் தனிநபர் திட்டம், மூன்றாவதாக கணிக்கத்தக்க ரினீவல் தொகை போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة