இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 03, 2022

Comments:0

இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. - LKG in this school. Commencement.. Student Admission Notification Released.

நாடு முழுவதும், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா (கே.வி) பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது. மத்திய - மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காலியிடங்கள் இருந்தால், பொது தரப்பினர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாக இருந்த குறைந்த பட்ச வயது, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'பால்வாடிகா' என்ற பெயரில் ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி.பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்டுள்ளார்.அதில், "பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும், பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும், பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் 10-ம் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பதிவுகள் நடக்கும். பாலவாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் வகுப்புகளுக்கு, 73051 60907, 971058 8122 என்ற எண்களில் ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி. பள்ளியை தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews