பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أكتوبر 01، 2022

Comments:0

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

தமிழகத்தில் காலியாக இருந்த 1,024 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளா் காலி பணியிடங்களுக்கு உரிய நபா்களை தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த 2019 நவ. 27-இல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு டிச.8 முதல் 13 வரை கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக தலைமை செயலகத்தில் 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் கடந்த புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நடு அரசு பாலிடெகனிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் ப.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நீண்ட நெடுங்காலமாக விரிவுரையாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதையடுத்து தமிழக அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 1,024 பணியிடங்களை நிரப்பியுள்ளது. இதற்காக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة