தேர்வுகள் இல்லை! இந்திய ரயில்வே வாரியங்களில் 4,458 அப்ரண்டீஸ் பணியிடங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 11, 2022

Comments:0

தேர்வுகள் இல்லை! இந்திய ரயில்வே வாரியங்களில் 4,458 அப்ரண்டீஸ் பணியிடங்கள்

தேர்வுகள் இல்லை! இந்திய ரயில்வே வாரியங்களில் 4,458 அப்ரண்டீஸ் பணியிடங்கள்!
 
இந்திய ரயில்வே வாரியங்கள் அவ்வப்போது தொழில் பழகுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் 3115 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கும், தெற்கு ரயில்வே 1343 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

கிழக்கு மத்திய ரயில்வே வாரியம்: எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை இந்த வாரியம் வெளியிட்டுள்ளது. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.

கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விதிவிலக்காக, Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General) தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது.

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 29/10/2022 ஆகும்.

NOTIFICATION FOR ENGAGEMENT OF ACT APPRENTICES FOR TRAINING SLOTS IN EASTERN RAILWAY UNITS

விண்ணப்பிக்க விரும்புவோர் 29/10/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

www.rrcer.com - kolkata என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தெற்கு ரயில்வே வாரியத்தில் 1343 காலியிடங்கள்:

வெல்டர், கார்ப்பென்டர்,பெயிண்டர், எலெக்ட்ரிசியன் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் (நெல்லூர், சித்தூர் மாவட்டங்கள்), கர்நாடகா(தக்சின கனடா) , கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், ஏனம் மற்றும் புதுச்சேரி) மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் (நிக்கோபார், வட மற்றும் மத்திய அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான்) ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

www.sr.indianrailways.gov.in என்ற இணைய பக்கத்தில் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level - 1 recruitment notification முந்தைய Gr. 'D' category posts (Grade Pay - Rs.1800/-)) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துவருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews