மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பு தாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் 35.40 மில்லி மீட்டர், தரங்கம்பாடியில் 11 மில்லி மீட்டர், சீர்காழி 63.8 மில்லி மீட்டர், கொள்ளிடம் 3.80 மில்லி மீட்டர், மணல்மேடு 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலை 8.15 மணிக்கு தாமதமாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர். ஏராளமான மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து மழையில் நனைந்தவாறு திரும்பிச் சென்றனர். மாணவர்கள் அவதி அடைவதை தடுக்கும் வகையில் விடுமுறை அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் முன்னதாக அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.