Increase in NEET pass percentage this year - நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 20, 2022

Comments:0

Increase in NEET pass percentage this year - நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி

நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி

விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டு கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு செல்கின்றனர்.

இந்தியாவில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியாகும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.ஆரம்பத்தில், நீட் தேர்வில் அதிகளவில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று வந்தனர்.

இந்த நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களும், அதிகளவில் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனுார், காணை, கண்டமங்கலம், விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், முகையூர், மரக்காணம், ஒலக்கூர், மயிலம், வல்லம், செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய 14 மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் முதுகலை ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இப்பயிற்சியில் வாரம்தோறும் தேர்வு மற்றும் நீட் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறமையை வளர்த்து வருகின்றனர்.இத்தேர்வில் கடந்த 2019-20ம் ஆண்டு பங்கேற்ற 368 மாணவர்களில் 58 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, 2020-21ம் ஆண்டில் பங்கேற்ற 330 பேரில் 65 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதேபோன்று, நடப்பு 2021-22ம் ஆண்டில் பங்கேற்க 735 பேரில், 184 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் 119 நீட் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்து அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ள விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே நீட் தேர்வு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews