நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய, தேசிய மருத்துவ கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகளில் பாதி இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டணத்தை வசூலிக்கும்படி, தேசிய மருத்துவ கமிஷன், 2022 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, போரூர் ராமச்சந்திரா, ஆதிபராசக்தி, பி.எஸ்.ஜி., உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைகளும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளும், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன.'அரசு கல்லுாரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை, தனியார் கல்லுாரிகள் வசூலிப்பது சாத்தியமற்றது; வசூலித்தால், கல்லுாரிகளை நடத்த முடியாது' என கூறப்பட்டது.
பொருந்தும்
மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தேசிய மருத்துவ கமிஷன் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டியதில்லை. தேசிய மருத்துவ கமிஷனின் உத்தரவு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.இடங்களின் எண்ணிக்கை மற்றும் அரசு ஒதுக்கீட்டுக்கான கட்டணங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணங்கள், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறாக உள்ளன.சில மாநிலங்களில் 15 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களாகவும், 85 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளன. சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 30 சதவீதம் மட்டுமே உள்ளன.எனவே, 2022 பிப்ரவரியில் பிறப்பித்த உத்தரவை, தேசிய மருத்துவ கமிஷன் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அதிகாரம்
தற்போதைய சட்டத்தில், 50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்த, தேசிய மருத்துவ கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இரண்டு வகையான மாணவர்களுக்கு இடையில், கட்டண விகிதத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால், மாணவர்களின் தகுதியை பலி கொடுத்ததாகி விடும்.தகுதி பட்டியலில் கீழே இருப்பவர்கள், அதிக கட்டணத்தை செலுத்த முன்வர மாட்டார்கள். அதனால், அந்த இடங்கள் காலியாக இருக்கும். அதனால், கல்வி நிறுவனத்துக்கும், நாட்டுக்கும் தான் இழப்பு.
மீண்டும் பரிசீலனை
வெவ்வேறு மாநிலங்களில் விபரங்களை சேகரித்து, விரிவான பணிகளை மேற்கொண்டு இருந்தாலும், சில அம்சங்களை, நிபுணர்கள் குழு பரிசீலனைக்கு எடுக்கவில்லை.நிபுணர்கள் குழு பரிந்துரை அளிக்கும் போது, இரண்டு வகையான மாணவர்களுக்கு இடையே கட்டண விகிதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், தகுதி பலியாகி விடும் என்பதை பரிசீலிக்கவில்லை.எனவே, மீண்டும் பரிசீலித்து, புதிய உத்தரவை, விரைவில் தேசிய மருத்துவ கமிஷன் பிறப்பிக்க வேண்டும். அதுவரை, தற்போது இருக்கும் கட்டண விகிதத்தை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.