சொந்தமாக தொழில் தொடங்குபவர்கள் கவனத்திற்கு - தொழில்முனைவோர் கருத்தரங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، سبتمبر 11، 2022

Comments:0

சொந்தமாக தொழில் தொடங்குபவர்கள் கவனத்திற்கு - தொழில்முனைவோர் கருத்தரங்கம்

Attention self-starters - Entrepreneurship Seminar

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்

சொந்தமாக தொழில் தொடங்க விருப்பம் உடையவர்களுக்கு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்த, இணையவழி பயிற்சி வரும் 13.09.2022 தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னையில் நடைபெறும் என்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18-30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியடப்பட்ட செய்திக் குறிப்பில், " முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்" என்றுதெரிவித்தது

மேலும் விவரங்களுக்கு: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 044-22252081, 22252082 8668102600, 9444557654

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة